மஹர சிறைச்சாலையின் செயல்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். மஹர சிறைச்சாலையில் நடந்த கலவரச் சம்பவம் தொடர்பாக இன்று (04) நாடாளுமன்றத்தில்…
மஹர சிறைச்சாலையின் செயல்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலையில் நடந்த கலவரச் சம்பவம் தொடர்பாக இன்று (04) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை நீதியமைச்சர் வெளியிட்டார். அதில், இதுபோன்ற சம்பவங்கள் ஒரு அலையாக மற்ற சிறைச்சாலைகளுக்கும் பரவும் சாத்தியக்கூறு குறித்தும் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.புலனாய்வுத் தகவல்..
பதற்றத்தை ஏற்படுத்தும் எந்தவொரு சூழ்நிலையையும் கட்டுப்படுத்தவும், அதே நேரத்தில் உயிரிழப்புகளைக் குறைக்கவும் தேவையான ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், வேறு இரண்டு அல்லது மூன்று சிறைச்சாலைகளில் இதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டமை குறித்த தகவல், சிறைத் துறைகளின் அதிகாரிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த சம்பவம் கைதிகளுக்கு இடையேயான போதைப்பொருள் தொடர்பான தகராறு என்றாலும், மஹர சிறைச்சாலையில் நடந்த சம்பவம் ஆட்சிக்கு எதிராக கைதிகளால் நடத்தப்பட்டது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சுமார் ஆயிரம் கைதிகள் ஒரே நேரத்தில் நடத்திய முன்னெப்போதும் இல்லாத இந்தத் தீ வைப்புத் தாக்குதலுக்குப் பின்னால் ஒரு திட்டமிட்ட சதி இருப்பதாகச் சந்தேகிக்கப்படுவதாகவும், அத்தகைய செயல் நடந்திருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கப்படாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
தீ வைப்பு மற்றும் அழிவு ஆகியவை பொதுமக்களின் வரிப்பணம் என்பதை கைதிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், அந்தப் பணத்தைக் கொண்டே அவை மீண்டும் கட்டப்பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.












