தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ தலைமையுடனான கலந்துரையாடல் ஒன்றை இலங்கை ஜப்பானிய தூதரக உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் மேற்கொண்டுள்ளனர். மேற்படி சந்திப்பில் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ரெலோ கட்சியின் தேசிய அமை…
தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ தலைமையுடனான கலந்துரையாடல் ஒன்றை இலங்கை ஜப்பானிய தூதரக உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.
மேற்படி சந்திப்பில் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ரெலோ கட்சியின் தேசிய அமைப்பாளரும் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை நாட்டின் சமகால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாகவும், தமிழ் மக்களின் உரிமை சார்ந்த விடயங்களில் அரசின் தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பாகவும் மற்றும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாகவும் பலதரப்பட்ட கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றது.
மேலும், இச்சந்திப்பில் சமகாலத்தில் தமிழர் நலன் மற்றும் உரிமை விடயங்களுக்காக தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் ஒண்றிணைவு தொடர்பாகவும், செம்மணி மனித புதைகுழி தொடர்பான மக்களுக்கு நடந்தேறிய அநீதிகளை முன்னிலைப்படுத்தி அவற்றுக்கான நீதி நிலைநாட்டப்பட கோரிய கலந்துரையாடல் இடம்பெற்றது. அத்துடன், போர்க்காலங்களில் ஐப்பான் அரசு மற்றும் இலங்கைக்கான ஐப்பானிய தூதரகம் எமது தமிழ் மக்களுக்கு பலதரப்பட்ட உதவிகளை, நிவாரணங்களாக வழங்கியதை சுட்டிக்காட்டியதுடன், தமிழ் மக்களுக்கு ஐப்பானிய அரசின் உதவி பணிகள் தொடர வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)