தமிழின அழிப்புக்கு நீதி கோரி பிரித்தானியாவில் இருவேறு இடங்களில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டமானது, லண்டனில் உள்ள இலங்கை தூதுரகம் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய இடங்களில் புலம்பெயர் அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.இனவழிப்பு இதன்போது, 198…

தமிழின அழிப்புக்கு நீதி கோரி பிரித்தானியாவில் இருவேறு இடங்களில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டமானது, லண்டனில் உள்ள இலங்கை தூதுரகம் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய இடங்களில் புலம்பெயர் அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.இனவழிப்பு

இதன்போது, 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற யூலை படுகொலை மற்றும் தமிழின அழிப்புக்கு நீதி கோரி கோசங்கள் எழுப்பப்பட்டுள்ளதுடன், பதாதைகளையும் ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

அத்துடன், 1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி தொடங்கி இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் புலம்பெயர் தமிழின செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.