இளம்பெண்ணின் நடத்தையில் சந்தேகப்பட்டு நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த அவரை எரித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு பாரதி நகரில் வசித்து வந்தவர் வினோதினி(24). இவருக்கு திருமணமாகி 4 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்…

இளம்பெண்ணின் நடத்தையில் சந்தேகப்பட்டு நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த அவரை எரித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பாரதி நகரில் வசித்து வந்தவர் வினோதினி(24). இவருக்கு திருமணமாகி 4 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த இரண்டு வருடங்களாக அவரை பிரிந்து தனது பெற்றோரின் வீட்டில் அருகே மற்றொரு வீட்டில் வினோதினி மகனுடன் வசித்து வந்தார்.இன்ஸ்டாகிராம் மூலம்  பழக்கம் இன்ஸ்டாகிராம் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சாயல்குடையை சேர்ந்த நவநீதி கிருஷ்ணன்(26) என்பவரோடு வினோதினிக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

கடந்த சில நாட்களாக நவநீத கிருஷ்ணனின் நடவடிக்கை பிடிக்காததால் வினோதினி அவரிடம் சரியாக பேசவில்லை. எனவே, வினோதினி தன்னை விட்டுவிட்டு வேறு யாருடனோ பழகி வருகிறார் என நவநீத கிருஷ்ணன் சந்தேகம் ஏற்பட்டது.

சம்பவத்தன்று நள்ளிரவு ஈரோட்டுக்கு வந்த நவநீத கிருஷ்ணன் வினோதினியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆத்திரமடைந் வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை வினோதினியின் உடல் மீது ஊற்றி தீ வைத்திருக்கிறார். அப்போது நவநீதகிருஷ்ணன் கையிலும் தீக்காயம் ஏற்பட்டது. ஆனால் அங்கிருந்த அவர் தப்பி ஓடிவிட்டார்.

வினோதினியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து அவரின் பெற்றோர்கள் அவரை ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஈரோடு கூடுதல் மகளிர் நீதிபதி நீதிமன்ற நீதிபதி அன்புச்செல்வி முன்னிலையில் நவநீதகிருஷ்ணன் என்னை ஊற்றி கொலை செய்யப்பட்டார் என வாக்குமூலம் கொடுத்துவிட்டு வினோதினி இறந்துவிட்டார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நவநீத கிருஷ்ணனை கைது செய்துள்ளனர். இன்னிலையில் கள்ளக்காதலால் பெண் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.