இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறல் நடவடிக்கைகளை கண்டித்து யாழ்ப்பாணம் தீவகப் பகுதி மீனவர்கள் இன்று கடலில் கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து படகுகளில் கடலுக்குச் சென்ற மீனவர்கள், கறுப்புக்கொடிகளை ஏந்தியவாறு தங்களது எதிர்ப்பை வெளிப்…
இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறல் நடவடிக்கைகளை கண்டித்து யாழ்ப்பாணம் தீவகப் பகுதி மீனவர்கள் இன்று கடலில் கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து படகுகளில் கடலுக்குச் சென்ற மீனவர்கள், கறுப்புக்கொடிகளை ஏந்தியவாறு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், மீன்பிடி வலைகள் மற்றும் ஏனைய தொழில் உபகரணங்கள் சேதமடைவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.
மேலும், இலங்கை கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக மீன்பிடியில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டிய அவர்கள், இதனை உடனடியாக தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அத்துடன், இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இணைந்து இந்த நீண்டகால பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்துவதோடு, எல்லை மீறி மேற்கொள்ளப்படும் மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீவக மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.












