இந்தோனேசியாவின் புளோரஸ் பகுதியில் இன்று (17) அதிகாலை 5.9 magnitude அளவில் மீண்டும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கடந்த 15ஆம் திகதி புளோரஸ் தீவைச் சுற்றிய பகுதியில் ஏற்பட்ட 7.7 magnitude சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தொடர்ச்சியாக பின்னதிர்வுகள் பதிவாகி வருகின்றன. புதிய நில…

இந்தோனேசியாவின் புளோரஸ் பகுதியில் இன்று (17) அதிகாலை 5.9 magnitude அளவில் மீண்டும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

கடந்த 15ஆம் திகதி புளோரஸ் தீவைச் சுற்றிய பகுதியில் ஏற்பட்ட 7.7 magnitude சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தொடர்ச்சியாக பின்னதிர்வுகள் பதிவாகி வருகின்றன. புதிய நில அதிர்வினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

முந்தைய நிலநடுக்கத்தில் இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 135 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், சுமார் 5,000 பேர் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நிலநடுக்கத்தினால் வீடுகள் மற்றும் பொது கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் வீதிகள் மற்றும் தொடர்பாடல் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, தொடர்ச்சியாக பின்னதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.