எல்நினோ தாக்கம் இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள நிலையில், பொதுமக்கள் சரியான நீர் முகாமைத்துவத்தை பின்பற்றி, அதிக வெப்பத்தினால் ஏற்படக்கூடிய நீர்த்தட்டுப்பாட்டை சமாளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட முன்வர வேண்டும் என பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். பெண்கள் வாழ்வுரி…

எல்நினோ தாக்கம் இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள நிலையில், பொதுமக்கள் சரியான நீர் முகாமைத்துவத்தை பின்பற்றி, அதிக வெப்பத்தினால் ஏற்படக்கூடிய நீர்த்தட்டுப்பாட்டை சமாளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட முன்வர வேண்டும் என பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

பெண்கள் வாழ்வுரிமைச்சங்கத்தின் ஏற்பாட்டில் எல்நினோ (El Niño) காலநிலை மாற்றம் தொடர்பான விசேட விழிப்புணர்வு செயலமர்வு, யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள எல்நினோ இச்செயலமர்வில் முதன்மை வளவாளராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறை பேராசிரியரும், கலைப் பீடாதிபதியுமான நாகமுத்து பிரதீபராஜா கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த செயலமர்வில் முக்கிய அம்சங்கள் ஒன்றான வெப்பத்தாக்கத்தின் காலப்பகுதி தொடர்பாக பேராசிரியர் மேலும் கூறுகையில்,

இந்து சமுத்திர பிராந்தியத்தை எல்நினோ நெருங்கி வருவதால் பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.

மத்திய பசுபிக் பிராந்திய கடற்பகுதிகளில் இருந்து இந்து சமுத்திர கடல் பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள எல்நினோ, ஜூலை மாதம் தொடக்கம் அக்டோபர் மாதம் வரை அதிக வெப்பத்தாக்கத்தை ஏற்படுத்தும்.நீரின் ஊடாக கடத்தப்படும் வெப்பம் இதேவேளை, வேகமாக பரவும் கடல் வெப்பம் நிலத்தின் ஊடாக வெப்பம் கடத்தப்படுவதை விட 16 மடங்கு வேகமாக நீரின் ஊடாக வெப்பம் கடத்தப்படுகிறது. இதனால் இந்து சமுத்திர கடற்பரப்பில் ஏற்படும் வெப்ப ஏற்றம் ஏனைய பகுதிகளுக்கும் மிக வேகமாக பரவி வருகிறது. அத்துடன் இந்த கடல் வெப்ப ஏற்றம் இலங்கை மற்றும் மாலைதீவுகளில் அதிக தாக்கத்தை செலுத்த வாய்ப்புள்ளது. இலங்கையை பொறுத்தவரை, குறிப்பாக வட மாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கடுமையான நீர் தட்டுப்பாட்டை இது உருவாக்கும்.

மேலும், வறட்சியும், மழைவீழ்ச்சியும் ஜூலை முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் கடுமையான வறட்சியை ஏற்படுத்தும்.எல்நினோ, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பாரிய மழை வீழ்ச்சியையும் தோற்றுவிக்கும். அக்டோபர் மாதத்திற்கு பின்னரே காற்றழுத்தத்தாழ்வு மண்டலங்கள் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், அதுவரை அதிக வறட்சியான காலநிலையே நிலவும்.சரியான நீர் முகாமைத்துவத்தை பின்பற்றல் "எல்நினோ இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள நிலையில், பொதுமக்கள் சரியான நீர் முகாமைத்துவத்தை பின்பற்றி, அதிக வெப்பத்தினால் ஏற்படக்கூடிய நீர்த்தட்டுப்பாட்டை சமாளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிகழ்வில் பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் இணைப்பாளர் வாசுகி, அமைப்பின் முக்கியஸ்தர்கள், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராமங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூகச்செயற்பாட்டாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.