இறுதி யுத்தத்தில் பெற்றோர்களால் இலங்கை இராணுவத்திடம் உயிரிடன் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்களுக்கு என்ன நடந்தது என காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர். நேற்று(25.08.2026) யாழ் மாவட்ட செயலகத்தின் முன்பாகவே அவர்கள் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளனர்.சர்வதேச காண…
இறுதி யுத்தத்தில் பெற்றோர்களால் இலங்கை இராணுவத்திடம் உயிரிடன் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்களுக்கு என்ன நடந்தது என காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நேற்று(25.08.2026) யாழ் மாவட்ட செயலகத்தின் முன்பாகவே அவர்கள் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளனர்.சர்வதேச காணாமல் போனோர் தினம்அவர்கள் மேலும் தெரிவிக்கையில், இறுதி யுத்தம் இடம்பெற்று 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில் 29 சிறுவர்கள் உட்பட 100 பேர் இலங்கை இராணுவத்திடம் அவர்களின் உறவினர்களால் உயிருடன் கையளிக்கப்பட்டனர்.
ஆனால் இன்று வரை அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் தேடி கண்டுபிடிக்க முடியாத ஓ எம் பி சர்வதேச காணாமல் போனோர் தினத்தை யாழில் நடத்துவது இலங்கை அரசாங்கத்தை திருப்திப்படுத்தும் ஒரு செயற்பாடாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினர்களை மேலும் காயப்படுத்தும் ஒரு செயற்பாடாக பார்க்கிறோம்.இலங்கையில் தமிழர்கள் காணாமலாக்கப்படுதல் என்பது மிகச் சாதாரண விடயமாக மாறிவிட்டது. வயது, பால் வேறுபாடின்றி காலத்துக்கு காலம் கடத்தப்பட்டிருக்கின்றனர். அவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்களில் அதிகளவான ஆண்களும், அதற்கு அடுத்த நிலையில் பெண்களும் இருக்கின்றனர். இதில் சிறுவர்கள் எனக் குறிப்பிடப்படும் விவரமறியாத பிள்ளைகளும் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.
அதையும் தாண்டி குழந்தைகளும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் காணாமல் ஆக்கப்படுதல் என்பது இலங்கையை தவிர உலகில் எங்குமே நடைபெற்றிருக்காத விடயம் வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் இடம் பெற்றிருக்கிறது.இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்கள் இதுவரை பல குழந்தைகள் இலங்கை இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டும் இலங்கை இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ளனர். இதற்கான நேரடி சாட்சிகள் இன்றும் உயிருடன் இருக்கிறார்கள்.
2009 ஆம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்த வேளையில் அதிகளவான குழந்தைகள் தம் பெற்றோருடன் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த பின்னரே காணாமலாக்கப்பட் டுள்ளனர்.தமது பெற்றோருடன் அழைத்துச் செல்லப்பட்ட சிறார்கள் மீளத் திரும்பவில்லை.
இந்த விடயம் காணாமல் போனோர் அலுவலகத்தின் விசாரணை அமர்வுகளில் ஆதாரத்துடன் முன்வைத்தும் சிறுவர்களுக்கு என்ன நடந்தது என இன்று வரை கூற முடியாத நிலையில் இந்த அலுவலகம் செயற்பட்டு கொண்டிருக்கிறது.
இலங்கையில் காலத்துக்கு காலம் மாறி வரும் அரசாங்கங்கள் இந்த விவகாரம் தொடர்பில் பேச மறுத்து வருகின்ற நிலையில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர் தொடர்பான விடயங்களை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஐ.நாவுக்கு பட்டியலிட்டு அனுப்பியுள்ளது என கவலை தெரிவித்திருந்தனர்.





-559589_850x460.jpg)
-559577_850x460.jpg)





