பல ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளின் நிலை என்ன என்பதை அறியாமல் வாழும் குடும்பங்களின் வேதனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பிரமுகர் குமார் ஜெயக்குமாரன் தெரிவித்துள்ளார்.இன்று(26.08.2026…

பல ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளின் நிலை என்ன என்பதை அறியாமல் வாழும் குடும்பங்களின் வேதனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பிரமுகர் குமார் ஜெயக்குமாரன் தெரிவித்துள்ளார்.இன்று(26.08.2026) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள்அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இது ஒரு அரசியல் பிரச்சினையாக மட்டும் பார்க்கப்படக்கூடாது. இது மனித உயிர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பங்களின் உரிமைகள் மற்றும் உண்மையை அறியும் உரிமை தொடர்பான மனிதாபிமானப் பிரச்சினையாகும்.

எனவே, இலங்கை அரசாங்கத்திடம் நான் வலியுறுத்திக் கேட்பது என்னவென்றால் செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள் முழுமையான, சுயாதீனமான மற்றும் வெளிப்படையான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதாகும்.அத்துடன் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் நவீன அறிவியல் முறைகள் மற்றும் DNA பரிசோதனைகள் மூலம் அடையாளம் காணப்பட வேண்டும்.  காணாமல் போனவர்களின் குடும்பங்களிடமிருந்து பெறப்பட்ட DNA மாதிரிகளுடன் அவை ஒப்பிடப்பட்டு, முடிவுகள் குடும்பங்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட வேண்டும். எந்தத் தரப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், குற்றத்திற்கு பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.  விசாரணைகளில் அரசியல் அல்லது நிர்வாகத் தலையீடு இல்லாத வகையில் சுயாதீனமான கண்காணிப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நீதிபாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மை, நீதி மற்றும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் உள்ளிட்ட சர்வதேச சமூகமும் இந்த விசாரணையை நெருக்கமாகக் கண்காணித்து, தேவையான தொழில்நுட்ப மற்றும் நிபுணத்துவ ஆதரவை வழங்க வேண்டும்.பல தசாப்தங்களாக ஒரு தாய் தனது மகனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு தந்தை தனது பிள்ளையின் நிலையை அறியாமல் இருக்கிறார். ஒரு குடும்பம் இன்னும் ஒரு பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.அவர்களுக்கு அரசியல் பேச்சு தேவையில்லை. அவர்களுக்கு உண்மை வேண்டும். நீதி வேண்டும். தங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஒரு இறுதி மரியாதை செலுத்துவதற்கான உரிமை வேண்டும்.

செம்மணி தொடர்பான உண்மை முழுமையாக வெளிக் கொண்டு வந்து, பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைக்கும் வரை இந்த விவகாரம் மறக்கப்படக்கூடாது, நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.