நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதுடன், பல கிராமங்கள், பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. இந்த சம்பவம் இன்று(26.08.2026) இடம்பெற்றுள்ளத…
நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதுடன், பல கிராமங்கள், பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
இந்த சம்பவம் இன்று(26.08.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போடே கோஷி ஆற்றில் ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கினால் நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் வீடுகள், பாலங்கள் மற்றும் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
ஆற்று நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதால் மீட்புப் பணிகளுக்காக அனுப்பப்பட்ட ஹெலிகொப்டர்களால் தரையிறங்க முடியாத நிலை காணப்படுகின்றது.பலரைக் காணவில்லை என்பதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
மீட்பு பணியை தீவிரப்படுத்தும் சீன அரசுஇதேவேளை, எல்லையோரப் பகுதியான கியிரோங் எல்லைக் கடவையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாகப் போக்குவரத்து, தொலைத்தொடர்பு மற்றும் மின்சார இணைப்புகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாகச் சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காணாமல் போனவர்களை மீட்கும் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
இந்த திடீர் வெள்ளப் பெருக்கினால் நேபாளத்தின் நீர்மின் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் மொத்த நீர்மின் உற்பத்தியில் 12 சதவீதத்திற்கும் அதிகமான உற்பத்தி முடங்கியுள்ளது.
கரையோரப் பகுதிகளில் வாழும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா அறிவுறுத்தியுள்ளார்.YOU MAY LIKE THIS VIDEO..












