அம்பாறை - உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று(25.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் நேற…
அம்பாறை - உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று(25.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட திடீர்ச் சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சகாக்களையும் கைது செய்ய நடவடிக்கை அந்த பகுதியின் ஏற்கனவே பிரதான போதைப்பொருள் வர்த்தகராக இருந்த நபர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, குறித்த நபர் ரகசியமான முறையில் போதைப்பொருள் விநியோகத்தை முன்னெடுத்து வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன்போது, 2050 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் ஒரு தொகை ரொக்கப் பணம் மற்றும் கைத்தொலைபேசி என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபருடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த மேலும் மூவரைக் கைது செய்வதற்கான விரிவான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.







-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)
-558066_850x460.jpg)
