கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுகஸ்தர பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வியாழக்கிழமை (23) கம்பஹா பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.மேலதிக விச…

கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுகஸ்தர பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வியாழக்கிழமை (23) கம்பஹா பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.மேலதிக விசாரணை

உயிரிழந்தவர் கட்டுகஸ்தர பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்துக்கு அருகில் இரத்தக் கறைகள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதவான் பரிசோதனைகளின் பின்னர், சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், நபரின் மரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.