கல்லுண்டாய் வெளி வேறொரு பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் உள்ளதனால் எங்களது நடவடிக்கைகளை மேற்கொள்வது சிரமமாக உள்ளதென யாழ் மாநகர சபையின் குழுத் தலைவர் ஜெகதீஸ்வரன் மயூரன் தெரிவித்துள்ளார். நேற்று(24.07.2026) நடைப்பெற்ற யாழ் மாநகர சபையின் கல்லுண்டாய் வெளி மற்றும் காக்கைதீவு கழிவகற்றல்…

கல்லுண்டாய் வெளி வேறொரு பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் உள்ளதனால் எங்களது நடவடிக்கைகளை மேற்கொள்வது சிரமமாக உள்ளதென யாழ் மாநகர சபையின் குழுத் தலைவர் ஜெகதீஸ்வரன் மயூரன் தெரிவித்துள்ளார். நேற்று(24.07.2026) நடைப்பெற்ற யாழ் மாநகர சபையின் கல்லுண்டாய் வெளி மற்றும் காக்கைதீவு கழிவகற்றல் தொடர்பில்  விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.யாழ் மாநகர சபையின் சுகாதாரக் குழுவின் தலைவர் சாரூபன் மற்றும் யாழ் மாநகர சபையின் மராமத்துவ குழுவின் தலைவர் மயூரன் ஆகியோர் இணைந்து இந்த ஊடக சந்திப்பினை நடத்தியுள்ளனர்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்லுண்டாய் வெளியானது எமது மாநகர சபையின் எல்லைக்கு அப்பாற்பட்டு வேறொரு பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் காணப்படுகிறது. இதனால் எங்களுடைய நடவடிக்கைகளை மேற்கொள்வது சிரமமாக உள்ளது.

என்றாலும் கூட நாங்கள் இந்த பிரச்சினை தொடர்பாக பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தோம் என குறிப்பிட்டார்.