பாறூக் ஷிஹான் கல்முனை ஆதார வைத்தியசாலையில் புதிய சிற்றூழியர்களாக ஒன்பது பெண் ஊழியர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, வைத்தியசாலையின் நிரந்தர சேவையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு நடவடிக்கையொன்றை இன்று முன்ன…
பாறூக் ஷிஹான்
கல்முனை ஆதார வைத்தியசாலையில் புதிய சிற்றூழியர்களாக ஒன்பது பெண் ஊழியர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, வைத்தியசாலையின் நிரந்தர சேவையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு நடவடிக்கையொன்றை இன்று முன்னெடுத்து வருகின்றன.
வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தேவையற்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கிலேயே இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகத் தொழிற்சங்கத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கும் அவர்களுக்கான அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புதிய சிற்றூழியர்களின் நியமனம் தொடர்பான பிரச்சினைக்கு உரிய தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதுடன், வைத்தியசாலையின் நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் ஊழியர்களின் பணிச்சூழலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.












