ஊழல், ஊழலுக்கு உடந்தையாக இருத்தல் மற்றும் சதித்திட்டம் தீட்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில், முன்னாள் ஊடக மற்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) புலனாய்வு அதிகாரிகளால் நேற்று (18) கைது செய்யப்பட…
ஊழல், ஊழலுக்கு உடந்தையாக இருத்தல் மற்றும் சதித்திட்டம் தீட்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில், முன்னாள் ஊடக மற்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) புலனாய்வு அதிகாரிகளால் நேற்று (18) கைது செய்யப்பட்டார் என குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இரண்டு வெவ்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று(18) காலை சுமார் 11.30 மணி மற்றும் பிற்பகல் 1.15 மணியளவில் கைது செய்யப்பட்டதாக சியாபோக் தெரிவித்துள்ளது.இரு குற்றச்சாட்டுக்கள்
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கெஹெலிய ரம்புக்வெல்ல, மீது இரு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் தொகுதிக்கு அப்பாற்பட்டு ஆறு பணியாளர்களை நியமித்தது மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல வெகுஜன ஊடக அமைச்சராகப் பணியாற்றியபோது அவர்களை சட்டவிரோதமாக அவரது அமைச்சரவைப் பணியாளர்களுடன் இணைக்க சதி செய்ததாகக் கூறப்படுவது ஒரு முதலாவது குற்றச்சாட்டாகும். அமைச்சுப் பணியாளர் பிரிவு ஏற்கனவே நிரம்பியிருந்ததாகவும், கெஹெலிய ரம்புக்வெல்லவின் நடவடிக்கைகளால் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு ரூ. 14.32 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாகவும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கெஹெலிய ரம்புக்வெல்ல
குண்டசாலை உடமலுவ தொல்பொருள் தளத்திலிருந்து சந்தகடா பஹானா (நிலாக்கல்) என அறியப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருள் திருட்டு தொடர்பான விசாரணையில் தலையிட்டதாகக் கூறப்படுவது இரண்டாவது குற்றச்சாட்டாகும்.
கண்டி இராச்சியத்தின் சிங்கள வம்சத்தின் கடைசி மன்னராக அடையாளம் காணப்பட்ட ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திரசிங்கனின் அரண்மனை நுழைவாயில் படிகளுக்கு அருகில் அந்த கலைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது. திருட்டு குறித்து முறையாக விசாரிக்க நடந்த முயற்சிகளில் கெஹெலிய ரம்புக்வெல்ல, தலையிட்டதன் மூலம், அவர் ஊழல், குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல் மற்றும் சதித்திட்டம் தீட்டுதல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு குற்றம் சாட்டுகின்றது.
கெஹெலிய ரம்புக்வெல்ல பின்னர் இரு வழக்குகளிலும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
அவரைத் தலா ரூ. 500,000 மதிப்புள்ள இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டார்.you may like this..












