அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. சிறுமி ஒருவரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியதாக குற்றம் சா…

அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

சிறுமி ஒருவரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர் எவ்வாறு அங்கு வந்தார் என்பது தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து அனுராதபுர பிரதான நீதவான் சியபத் சசிந்து விக்ரமதன, அனுராதபுர மேல் நீதிமன்ற வளாகத்தின் பொலிஸ் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜி. தர்மசிறிக்கு உத்தரவிட்டுள்ளார்.

மீண்டும் விசாரணைதகாத செயற்பாட்டு சம்பவம் தொடர்பில் பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு எதிராக அனுராதபுர பிரதான நீதவான் நீதிமன்றில் உள்ள வழக்கு கடந்த 21ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சட்டத்தரணி சானக அபேவிக்ரம நீதிமன்றில் முன்வைத்த விசேட கருத்துக்களை கருத்திற்கொண்டே பிரதான நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.