அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு, பால் பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் பதிலடி வரிகளை விதிக்கவுள்ளதாக கனடாவின் பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 20…

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு, பால் பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் பதிலடி வரிகளை விதிக்கவுள்ளதாக கனடாவின் பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 20 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்ததைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே கனடா இந்த முடிவை எடுத்துள்ளது.தீவிர பேச்சுவார்த்தை

ஒட்டாவாவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதமர் மார்க் கார்னி, கனடாவின் தொழிலாளர்கள், விவசாயிகள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களைப் பாதுகாப்பதற்காக அமெரிக்காவின் வரிகளுக்கு நிகரான வரியை கனடாவும் விதிக்கும் எனத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பல நாட்கள் தீவிர பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்குப் பதிலளித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடா அமெரிக்காவின் ஒரு மாநிலமாக இல்லாமல், அதன் அனைத்துச் சலுகைகளையும் அனுபவிக்க விரும்புவதாகத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் இந்த கடுமையான வரி விதிப்பினால் கனடாவில் பொருட்களின் விலைகள் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும் என அஞ்சப்படும் அதேவேளை, கனடா பிரதமர் ஏனைய ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் புதிய வர்த்தக உறவுகளை பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.