'அமைதி மற்றும் மனிதநேயத்திற்கான ஒரு படி என்ற கருப்பொருளின் கீழ், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் முன்னணி பங்காளிகள் இணைந்து நடத்தும் 'கொழும்பு மாரத்தான் 2026' உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.இலங்கையை உலகளாவிய விளையாட்டு சுற்றுலா வரைபடத்தில் முதன்மைப்பட…
'அமைதி மற்றும் மனிதநேயத்திற்கான ஒரு படி என்ற கருப்பொருளின் கீழ், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் முன்னணி பங்காளிகள் இணைந்து நடத்தும் 'கொழும்பு மாரத்தான் 2026' உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.இலங்கையை உலகளாவிய விளையாட்டு சுற்றுலா வரைபடத்தில் முதன்மைப்படுத்தும் நோக்கிலும், கொழும்பு நகரை சர்வதேச நிகழ்வுகளுக்கான மையமாக நிலைநிறுத்தும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டி, எதிர்வரும் செப்டம்பர் 13 ஆம் திகதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு
கொழும்பில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே, பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன உட்பட பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
உலகப்புகழ்பெற்ற நகர மாரத்தான்களின் மாதிரியில் திட்டமிடப்பட்டுள்ள இப்போட்டி, விளையாட்டு சிறப்பையும் சுற்றுலா மேம்பாட்டையும் ஒன்றிணைத்து நாட்டிற்கு நீண்டகால நன்மைகளைத் தரும் என அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.
அத்துடன், இந்நிகழ்வில் கொழும்பு மாரத்தான் 2026 இலச்சினையைக் கொண்ட எல்.பி.எல் ஜப்னா கிங்ஸ் அணியின் உத்தியோகபூர்வ சீருடையும் வெளியிடப்பட்டதுடன், அணியின் தலைவர் பானுக ராஜபக் ஷ நினைவுச் சீருடையை அமைச்சரிடம் கையளித்தார்.சர்வதேச வீதி அளவீட்டு நிபுணர்கள்முழு மாரத்தான் (42.195 கி.மீ.), அரை மாரத்தான் (21.097 கி.மீ.), 10 கி.மீ. வீதி ஓட்டம், 5 கி.மீ. பொழுதுபோக்கு ஓட்டம் மற்றும் சிறுவர்களுக்கான மினி ரன் என 5 பிரிவுகளின் கீழ் நடைபெறவுள்ள இப்போட்டியில் 4,000 இற்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச தடகள தரநிலைகளுக்கு அமைய, சர்வதேச வீதி அளவீட்டு நிபுணர்களின் மேற்பார்வையிலும் இலங்கை தடகள சங்கத்தின் 100 சான்றளிக்கப்பட்ட அதிகாரிகளின் வழிகாட்டலிலும் போட்டிகள் துல்லியமாக நடத்தப்படவுள்ளன.












