இந்த ஆண்டில் இதுவரை கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 258 தீ விபத்துகள் பதிவாகியுள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் தீ விபத்துகள் தொடர்பான 17 மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு முழுவதும் கொழும்பு மாவட்டத்தில் 382 தீ விபத்துகள…

இந்த ஆண்டில் இதுவரை கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 258 தீ விபத்துகள் பதிவாகியுள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில் தீ விபத்துகள் தொடர்பான 17 மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு முழுவதும் கொழும்பு மாவட்டத்தில் 382 தீ விபத்துகளும், 46 மீட்புப் பணிகளும் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் இதுவரை இடைப்பட்ட காலப்பகுதியில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 258 தீ விபத்துகள் பதிவாகியுள்ளமை மிகுந்த கவனத்திற்குரிய விடயமாகும் எனத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

வேலைத்தலங்களில் போதுமான தீயணைப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்மை. அவசர சந்தர்ப்பங்களில் உடனடியாகச் செயற்பட முடியாமை. வீடுகள் மற்றும் வர்த்தக வளாகங்களில் பாதுகாப்பற்ற மின் இணைப்புகள் மற்றும் பயன்பாடு. நிலவும் வறட்சியான காலநிலை. ஆகிய காரணங்களே இந்த விபத்துக்களுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.