வத்தளை, பள்ளியாவத்தையில் பிறந்தநாள் விழாவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் (23) திகதி இரவ…
வத்தளை, பள்ளியாவத்தையில் பிறந்தநாள் விழாவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் (23) திகதி இரவு குழந்தையொன்றின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டிருந்த ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருந்தது.போதைப்பொருள் கடத்தல் மோதல் இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார்.இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், கொலைக்குற்றச்சாட்டுக்கு உள்ளான 'மட்டக்குளிய குடு ரொஷன்' என்ற போதைப்பொருள் கடத்தல்காரரை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ரொஷனின் சகோதரர்களில் ஒருவரின் குழந்தையின் பிறந்த நாள் விழாவின்போதே தலையில் முக்காடு அணிந்த ஒருவர் காரில் வந்து மண்டபத்திற்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. சிறப்பு விசாரணைசம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஒரு சிறப்பு விசாரணையை தொடங்கியிருந்தது. அதன் தொடர்ச்சியாக, நேற்று (29) மாலை, சீதுவ பொலிஸ் பிரிவின் முக்கலங்கமுவ பகுதியில், சந்தேகநபர்கள் வாடகை அடிப்படையில் காரை பெறுவதற்காக தனது கணக்கிலிருந்து பணம் செலுத்திய குற்றத்திற்கு உதவிய ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர், சீதுவ, பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஆவார். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவு இதுகுறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.










-558103_850x460.jpg)

