மிதமிஞ்சிய அலைபேசி பயன்பாடு குறித்து கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கவலை வெளியிட்டுள்ளார். அளவுக்கு அதிகமான அலைபேசி பயன்பாடு மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் தாக்கம் காரணமாக சமூகத்தில் மனித உறவுகளும் குடும்ப பிணைப்புகளும் சீர்குலைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்…

மிதமிஞ்சிய அலைபேசி பயன்பாடு குறித்து கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கவலை வெளியிட்டுள்ளார். அளவுக்கு அதிகமான அலைபேசி பயன்பாடு மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் தாக்கம் காரணமாக சமூகத்தில் மனித உறவுகளும் குடும்ப பிணைப்புகளும் சீர்குலைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சீதுவையில் நடைபெற்ற மத வழிபாட்டுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.தாராளமய சந்தைப் பொருளாதாரத்தின் அறிமுகத்தைத் தொடர்ந்து வளர்ந்துள்ள நுகர்வோர் கலாச்சாரம், மக்களிடையே தேவையற்ற ஆசைகளை உருவாக்கியுள்ளது என தெரிவித்துள்ளார். பணத்தின் பின்னால் ஓடுவதே நவீன சமூகத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறியுள்ளது. சந்தை சார்ந்த இக்கலாச்சாரம், மக்களின் உண்மையான தேவைகள் மற்றும் நற்பண்புகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அவசியமற்ற ஆடம்பரப் பொருட்களைத் தேடி ஓடத் தூண்டுகிறது என தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள மட்டுமே பயன்படுத்தப்பட்ட சாதனங்கள், இன்று மக்களின் அன்றாட வாழ்க்கையை ஆதிக்கம் செலுத்தும் அளவிற்குக் கட்டுப்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். இரவு நேரங்களில் நீண்ட நேரம் கைபேசிகளைப் பயன்படுத்துவது உட்பட அளவுக்கு அதிகமான பயன்பாட்டினால் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான ஆரோக்கியமான உரையாடல்கள் குறைந்து, குடும்ப பிணைப்புகளும் பாரம்பரிய விழுமியங்களும் பலவீனமடைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், சமூக முன்னேற்றமும் உயர்கல்வியும் மனிதனிடம் அகந்தையை ஏற்படுத்திவிடக் கூடாது எனவும், அதிவேகமாக மாற்றமடைந்து வரும் இந்த உலகளாவிய சூழலில் பணிவையும் மனிதநேயத்தையும் பேணிப் பாதுகாப்பது மிகவும் அவசியம் எனவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.