ஹட்டனில் இருந்து பொகவந்தலாவ நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்றில் பாடசாலை மாணவர்கள் அளவிற்கு மீறி ஏற்றிச் செல்லப்பட்ட சம்பவம் இன்று காலை ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் பதிவாகியுள்ளது. காலை வேளையில் வழமையாக பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் குறித்த தனியார் பேருந்தில், மாணவர…
ஹட்டனில் இருந்து பொகவந்தலாவ நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்றில் பாடசாலை மாணவர்கள் அளவிற்கு மீறி ஏற்றிச் செல்லப்பட்ட சம்பவம் இன்று காலை ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் பதிவாகியுள்ளது.
காலை வேளையில் வழமையாக பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் குறித்த தனியார் பேருந்தில், மாணவர்கள் பேருந்தின் இருபுற மிதிப்பலகைகளிலும் தொங்கியபடி பாதுகாப்பற்ற முறையில் பயணித்த காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளன.
ஹட்டனில் இருந்து புறப்படும் இந்த பேருந்தில் தினந்தோறும் அதிகளவான மாணவர்கள் பயணிப்பதாகவும், போதிய பேருந்து வசதியின்மை காரணமாக இவ்வாறான ஆபத்தான சூழலில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
பாடசாலை நாட்களில் மாணவர்களுக்காக காலை நேரத்தில் மேலதிக அரசுப் பேருந்து சேவையை இயக்கினால், மாணவர்களின் போக்குவரத்து சிரமத்தை குறைத்து பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய முடியும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு மாணவர்கள் உயிரை பணயம் வைத்து மிதிப்பலகைகளில் தொங்கியபடி பயணிக்கும் நிலை தொடர்வது கடும் கவலைக்குரியது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக போக்குவரத்து அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.












