கொழும்பு- பெல்லன்வில பகுதியில் சற்று நேரத்திற்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர் சிகிச்சைக்காக கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவ…

கொழும்பு- பெல்லன்வில பகுதியில் சற்று நேரத்திற்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர் சிகிச்சைக்காக கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.மேலும், துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.துப்பாக்கிச் சூடுநாட்டில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 18 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.இவ்வாறு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மொத்தமாக 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.