அனுராதபுரம் - கல்கிரியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலலுவெவ குளக்கரைப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று(26.07.2026) மாலை பிரதேச மக்களின் உதவியுடன் இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.பொலிஸ் வ…

அனுராதபுரம் - கல்கிரியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலலுவெவ குளக்கரைப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று(26.07.2026) மாலை பிரதேச மக்களின் உதவியுடன் இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.பொலிஸ் விசாரணை உயிரிழந்தவர் அனுராதபுரம் - நொச்சியாகம, காலதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.நீதிவான் விசாரணைகளுக்குப் பின்னர், பிரேத பரிசோதனைக்காகச் சடலம் கெக்கிராவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்துக்கான காரணம் தொடர்பில் கல்கிரியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.