டீ.கே.ஜி. கபில ரூ. 1 கோடியே 48 இலட்சம் (14.8 மில்லியன்) பெறுமதியான ‘குஷ்’ (Kush) போதைப்பொருள் தொகையை நாட்டிற்கு அழைத்து வந்த இலங்கைப் பயணி ஒருவர், அதனைக் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல முயன்றபோது 27 ஆம் திகதி காலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவி…
டீ.கே.ஜி. கபில
ரூ. 1 கோடியே 48 இலட்சம் (14.8 மில்லியன்) பெறுமதியான ‘குஷ்’ (Kush) போதைப்பொருள் தொகையை நாட்டிற்கு அழைத்து வந்த இலங்கைப் பயணி ஒருவர், அதனைக் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல முயன்றபோது 27 ஆம் திகதி காலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மொனராகலைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய வர்ண பூச்சுத் தொழிலாளி (பெயிண்டர்) ஆவார்.
இவர் 27 ஆம் திகதி காலை 09.25 மணிக்குத் தாய்லாந்தின் பாங்காக் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யு.எல்.-403 (UL-403) விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.
இதன்போது, அவர் கொண்டு வந்த பயணப் பொதிக்குள், 1 கிலோகிராம் 480 கிராம் எடையுடைய இந்த ‘குஷ்’ போதைப்பொருள், இயந்திரவியல் முறையில் தொத்திறைச்சி (சொசேஜ்) வடிவில் தயாரிக்கப்பட்டு, அதன் மீது சாக்லேட் பூசப்பட்டு, காற்றுப்புகாதவாறு பொதி செய்யப்பட்டுள்ளதுடன், வெளிப்படையாகப் பார்க்கும்போது சாக்லேட் போல் தோற்றமளிப்பதற்காகப் பிரபல சாக்லேட் வர்த்தக நாமம் ஒன்றும் அதில் அச்சிடப்பட்டிருந்தது.
இத்தகைய 70 சாக்லேட் பொதிகளுக்குள் இந்த ‘குஷ்’ போதைப்பொருள் தொகை மிக நைசாக மறைத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவைகளைத் தனது பயணப் பொதியிலிருந்த ஏனைய டொஃபி மற்றும் சாக்லேட்டுகளுடன் சேர்த்துத் தயாரித்து மறைத்து எடுத்து வந்துள்ளார்.
இந்த விமானப் பயணியும், அவர் கொண்டு வந்த ‘குஷ்’ போதைப்பொருள் தொகையும் இது குறித்த மேலதிக விசாரணைகளுக்காக 27 ஆம் திகதியன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளன.







-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)
-558066_850x460.jpg)
