அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தானாகவே கிடைக்கும் 'பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமையை கட்டுப்படுத்தும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2 புதிய நிறைவேற்று உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். முன்னதாக இத்தகைய முயற்சியை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்திர…

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தானாகவே கிடைக்கும் 'பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமையை கட்டுப்படுத்தும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2 புதிய நிறைவேற்று உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார்.

முன்னதாக இத்தகைய முயற்சியை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்திருந்த போதிலும், தற்போது வரையறுக்கப்பட்ட சில புதிய விதிகளுடன் இந்த உத்தரவுகளை அவர் பிறப்பித்துள்ளார்.குடியுரிமை கட்டுப்பாடு இதன்படி, வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள், குறிப்பிட்ட அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் மற்றும் "எதிரி நாட்டவர்கள்" (Alien Enemy) என வகைப்படுத்தப்படுபவர்களின் குழந்தைகளுக்குத் தானியங்கி முறையிலான அமெரிக்கக் குடியுரிமை மறுக்கப்படும்.

மேலும், போலி ஆவணங்கள் மூலம் குடியுரிமை பெற முயன்ற பெற்றோரின் குழந்தைகளுக்கும் இக்கட்டுப்பாடு பொருந்தும்.

அத்துடன், பிரசவத்திற்காகவே சுற்றுலா விசா மூலம் அமெரிக்காவிற்கு வருகை தந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் "பிறப்பு சுற்றுலா" (Birth Tourism) முறையைத் தடுக்கும் வகையிலும் இரண்டாவது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த புதிய கட்டுப்பாடுகளின் சட்டப்பூர்வத் தன்மை குறித்து மீண்டும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.