ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை இலக்கு வைத்து இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சவூதி ஆதரவு இராணுவப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சவூதி அரேபிய தலைமையிலான கூட்டுப் படைகளுக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்க…
ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை இலக்கு வைத்து இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சவூதி ஆதரவு இராணுவப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபிய தலைமையிலான கூட்டுப் படைகளுக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மீண்டும் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ஏமன் தலைநகர் சனாவிற்கு (Sanaa) மேற்கே உள்ள பகுதியிலிருந்தே இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.தாக்குதல்கள் மாரேப் நகரின் பல பகுதிகளை இலக்கு வைத்து இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இதில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டிருக்கக் கூடும் எனவும் அப்பகுதிவாசி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, சவூதி அரேபியாவின் தென்மேற்கு எல்லைப் பகுதியான நஜ்ரான் (Najran) பிராந்தியத்தின் மீதும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக சவூதி தலைமையிலான கூட்டுப் படையின் உத்தியோகபூர்வ பேச்சாளர் மேஜர் ஜெனரல் துர்கி அல்-மால்கி உறுதிப்படுத்தியுள்ளார்.
பொதுமக்கள் வாழும் பகுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில் பெண் மற்றும் குழந்தை உட்பட 11 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள சவூதி கூட்டுப் படை, ஹூதி அமைப்பினரின் இச்செயலை வன்மையாகக் கண்டித்துள்ளது.












