அனுராதபுரம் - பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில், வங்கி அதிகாரி உயிரிழந்துள்ளார். எப்பதொல பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றின் முகாமையாளர் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அனுராதபுரத்தை சேர்ந…

அனுராதபுரம் - பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில், வங்கி அதிகாரி உயிரிழந்துள்ளார். எப்பதொல பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றின் முகாமையாளர் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அனுராதபுரத்தை சேர்ந்த ரொஹான் ஜயந்த பண்டார என்ற 43 வயதுடைய திருமணமாகாதவராவார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.நேருக்கு நேர் மோதி விபத்து அனுராதபுரத்தில் இருந்து எப்பதொல நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், அனுராதபுரம் நோக்கி சென்ற தனியார் பேருத்துடன் நேருக்கு நேர் மோதி  விபத்து ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்வதற்காக வீதியின் வலது பக்கமாக மோட்டார் சைக்கிளை செலுத்திய வேளையில் எதிரே வந்த பேருத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த வங்கி முகாமையாளர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.