பொரளை புதிய மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பதறத்தில் உயிரிழந்த கைதி தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பதற்றம் காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 கைதிகள் காயமடைந்துள்ளனர். வெளிப்புறத்திலிருந்து ஒரு தரப்பினரால் சிறைச்சாலை…

பொரளை புதிய மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பதறத்தில் உயிரிழந்த கைதி தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த பதற்றம் காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 கைதிகள் காயமடைந்துள்ளனர்.

வெளிப்புறத்திலிருந்து ஒரு தரப்பினரால் சிறைச்சாலை வளாகத்திற்குள் வீசப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் பொதியொன்றைச் சிறைச்சாலை அதிகாரிகள் பொறுப்பேற்றமையினால் மோதல் இடம்பெற்றுள்ளது.குற்றக் கும்பல்இதன்போது சில கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளை அச்சுறுத்தியதுடன், பின்னர் சுமார் 45 கைதிகள் கொண்ட குழுவினர் சிறைக் கதவை உடைத்து வெளியே வந்துள்ளனர். அவர்களில் பெரும்பான்மையினர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்கொஸ்மல்லி என்பவரின் ஆதரவாளர்கள் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அமைதியற்ற முறையில் நடந்துகொண்ட குழுவினர் சிறைச்சாலை வாயிலின் ஊடாக வெளியே செல்ல முற்பட்டுள்ளனர். இதன் போது, சிறைச்சாலை அதிகாரிகள் நிலைமையைக் கட்டுப்படுத்தக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர். கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த முகமது அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 35 வயதுடையவராவார் என தெரியவந்துள்ளது. உயிரிழந்த கைதுஅவர் கல்கிஸ்ஸ வட்டரப்பல வீதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை, நீர்கொழும்பில் இடம்பெற்ற இரட்டைக் கொலை உள்ளிட்ட பல கொலைகளுடன் தொடர்புடையர் ஆவார். மேலும், ஹோமாகம ஹந்தயா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரின் ஒப்பந்தத் துப்பாக்கிச் சூடு நடத்துநராகவும் செயற்பட்டுள்ளார். குற்றவாளிக்கு எதிராக காலி, அம்பாறை, நீர்கொழும்பு, ஹோமாகம உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அத்துடன், கனேமுல்ல சஞ்சீவ படுகொலையின் துப்பாக்கிச் சூடு நடத்துநராக முதற்கட்டமாகச் சந்தேகிக்கப்பட்டவரும் இவராகும். சம்பவத்தில் காயமடைந்த மேலும் 10 கைதிகள் சிகிச்சைகளுக்காகச் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.