இலங்கை போக்குவரத்துச் சபையின் நாடளாவிய ரீதியிலான டிப்போக்களில் ஒப்பந்த அடிப்படையில் சாரதிகள் மற்றும் நடத்துநர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதன்படி, 788 சாரதி வெற்றிடங்களும், 249 நடத்துநர் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அந்தந்த பிரதேச…
இலங்கை போக்குவரத்துச் சபையின் நாடளாவிய ரீதியிலான டிப்போக்களில் ஒப்பந்த அடிப்படையில் சாரதிகள் மற்றும் நடத்துநர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதன்படி, 788 சாரதி வெற்றிடங்களும், 249 நடத்துநர் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அந்தந்த பிரதேசங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ஆட்சேர்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.வேலைவாய்ப்புசாரதி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ஆறு பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும் என்பதுடன், இரண்டு பாடங்களில் திறமைச் சித்தியும் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக செல்லுபடியாகும் கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பதுடன், குறிப்பிடப்பட்டுள்ள உடல் மற்றும் சுகாதாரத் தகைமைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
நடத்துநர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.விண்ணப்பம் கோரல் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தாய்மொழி மற்றும் கணிதம் உள்ளிட்ட ஆறு பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும் என்பதுடன், இரண்டு பாடங்களில் திறமைச் சித்தியும் பெற்றிருக்க வேண்டும்.
தெரிவு செய்யப்படும் சாரதிகளுக்கு மாதாந்தம் 40,847 ரூபாய் அடிப்படை ஒப்பந்தக் கொடுப்பனவும், நடத்துநர்களுக்கு 40,008 ரூபாய் அடிப்படை ஒப்பந்தக் கொடுப்பனவும் வழங்கப்படும்.
இதற்கு மேலதிகமாக 17,800 ரூபாய் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு, மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் ஊக்குவிப்புக் கொடுப்பனவுகளும் வழங்கப்படும்.
ஊழியர் சேமலாப நிதியத்திற்கு (EPF) ஊழியர்கள் 8 சதவீத பங்களிப்பை வழங்குவதுடன், தொழில் வழங்குநர் 12 சதவீத பங்களிப்பை வழங்குவார்.
ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கு (ETF) தொழில் வழங்குநரால் 3 சதவீத பங்களிப்பும் வழங்கப்படும்.நியமனம் நேர்முகப் பரீட்சை, நடைமுறைப் பரீட்சை மற்றும் தொடர்புடைய பயிற்சி நெறிகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு இடம்பெறும். நியமனம் செய்யப்பட்ட பின்னர் பணியிட மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியிடத்திலிருந்து 30 கிலோமீற்றர் வரையான சுற்றளவில் பணிக்கு சென்று வருவதற்கான பயண அனுமதிப்பத்திரமும் வழங்கப்படும்.
குறிப்பிட்ட மாதிரி வடிவில் தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை, தலைமை நிர்வாக அதிகாரி, இலங்கை போக்குவரத்துச் சபை, இலக்கம் 200, கிருல வீதி, நாரஹேன்பிட்ட, கொழும்பு 05 என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் 2026 செப்டெம்பர் 7ஆம் திகதிக்குள் கிடைக்குமாறு அனுப்பப்பட வேண்டும்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4












