மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் உயர்நீதிமன்றத்தில் சில வெற்றிடங்கள் ஏற்பட்டன. குறித்த வெற்றிடங்களுக்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு வேண்டப்பட்டவர்களை நிமித்துள்ளதாக வெளிநாட்டில் இருந்து இயங்கும் புலனாய்வு வலையொளி செய்தித் தளம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.அதில்…
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் உயர்நீதிமன்றத்தில் சில வெற்றிடங்கள் ஏற்பட்டன. குறித்த வெற்றிடங்களுக்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு வேண்டப்பட்டவர்களை நிமித்துள்ளதாக வெளிநாட்டில் இருந்து இயங்கும் புலனாய்வு வலையொளி செய்தித் தளம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.அதில் தெரிவிக்கப்பட்டுள்ள மேலதிக தகவல்கள்..
அரசு நீதித்துறையில் அதிகாரத்தை பிரயோகிப்பதாகவும் அல்லது தலையிடுவதாக எதிர்க்கட்சிகள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன. ஆனால் அரசு நீதித்துறையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு தலையீட்டையும் செய்யவில்லை என்பது தெளிவான காரணியாகும். ஆனால், இந்த எதிர்க்கட்சியினர் ஆட்சியில் இருந்தபோது, நீதிபதிகளை நியமிப்பதற்கு அல்லது வழக்குத் தீர்ப்புகளுக்கு எவ்வாறு அழுத்தங்களைப் பிரயோகித்தது, தலையீடுகளைச் செய்தது என்பது இன்று சாட்சிகளுடன் தெரியவந்துள்ளது. மகிந்த வழங்கிய நியமனம்அந்த காலத்தில் உயர்நீதிமன்றத்தில் இருந்த நீதிபதிகளுக்கான வெற்றிடங்களுக்கு மகிந்த ராஜபக்ச பியந்த ஜயவர்தன என்பவரை நீதிபதியாக நியமித்தார். உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட பியந்த ஜயவர்தன என்பவர், நீதித்துறை படிநிலைகளான நீதவான், மாவட்ட நீதிபதி, மேல் நீதிமன்ற நீதிபதி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியிலிருந்து உயர்நீதிமன்றத்திற்கு வந்த ஒருவரல்ல. இந்த பியந்த ஜயவர்தன என்பவர் நீதித்துறை சேவைக்கு வெளியே இருந்த ஒரு சட்டத்தரணி ஆவார். அத்துடன், இவர் பசில் ராஜபக்சவின் சட்டத்தரணியாவார்.
தனது சகோதரரின் சட்டத்தரணியை நாட்டின் உயர் நீதித்துறை பீடமான உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் வழங்கியது அரசியல் தலையீடு இல்லையா? அதில் ராஜபக்சவினர் நீதித்துறையில் அரசியல் தலையீட்டைச் செய்யவில்லையா? இந்தச் சந்தர்ப்பங்களில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இதைக் காணவில்லையா? அவை சட்டத்தின் மேலாதிக்கத்திற்கோ அல்லது சட்டத்தின் சுயாதீனத்திற்கோ பாதிப்பை ஏற்படுத்தாத விடயங்களா? அவை குறித்து அக்காலத்தில் ஒன்றுமே பேசவில்லை. அத்தோடு, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோதும் இதே போன்ற ஒரு நியமனத்தை செய்தார். அதாவது, உயர்நீதிமன்றத்திற்கு பிரசன்ன ஜயவர்தன என்பவரை நியமித்தார். எனவே, பிரசன்ன ஜயவர்தன - பியந்த ஜயவர்தன ஆகிய இருவருமே அரசியல் தேவைகளுக்காக, உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டவர்கள். ஆனால், அதற்கு எதிராக யாரும் பேசவில்லை. இவ்வாறு ஆர்ப்பாட்டங்களும் செய்யவில்லை.












