ஒருபோதும் எந்தவிதமான அநீதியையும் நான் இழைக்கவில்லை என முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர், பூஜித் ஜயசுந்தரவுக்கு நீதிமன்றத்தில் கருத்து வெளியிடுவதற்கு நேற்று சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.…
ஒருபோதும் எந்தவிதமான அநீதியையும் நான் இழைக்கவில்லை என முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர், பூஜித் ஜயசுந்தரவுக்கு நீதிமன்றத்தில் கருத்து வெளியிடுவதற்கு நேற்று சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
இதன்போது அவர் "நான் நினைத்து எந்தவொரு காரியத்தையும் செய்யவில்லை. காவல்துறைக்கு இணைந்த நாளிலிருந்து பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன். நான் பல அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவுடன் இணைந்துதான் பணியாற்றினேன்.
பொறுப்புகூற வேண்டிய சிலரை விடுவித்துள்ளேன். அந்த சந்தர்ப்பங்களின் நான் மிகுந்த வேதனை உள்ளானேன்.
இந்தச் சம்பவத்துக்கு பிறகு இன்றுவரை அடிப்படை உரிமை வழக்குகள் மற்றும் சிவில் வழக்குகள் மூலம் எனக்கும் எனது மனைவிக்கும் எனது பிள்ளைகளுக்கும் மிகப்பெரிய மன அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன.
நான் எந்தவொரு தனிநபருக்கோ அல்லது காவல்துறை அதிகாரிக்கோ ஒருபோதும் எந்தவிதமான அநீதியையும் இழைக்கவில்லை. நான் பின்பற்றும் மதத்தின்படி, இதனை எனது முற்பிறவி வினையின் பயன் என்றே கருதுகிறேன்.
தயவுசெய்து கனிவோடு என்னைக் குறித்துப் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் காவல்துறை மாஅதிபராகச் சேவையாற்றிய என்னை மட்டும் இவ்வாறு நடத்துவது குறித்து மனிதாபிமான அடிப்படையில் பரிசீலிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.












