Colombo (News 1st) மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பிரபல குற்றவாளியான "இரத்மலானை சைமா" என அழைக்கப்படும் தனுஷ்க கௌஷல்ய மேலதிக விசாரணைக்காக பேராதனைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்…
Colombo (News 1st) மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பிரபல குற்றவாளியான "இரத்மலானை சைமா" என அழைக்கப்படும் தனுஷ்க கௌஷல்ய மேலதிக விசாரணைக்காக பேராதனைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த இரத்மலானை சைமா என்ற சந்தேகநபரைஒஉதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகல தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் நேற்று (10) பிற்பகல் நாட்டிற்கு அழைத்து வந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவும் மலேசியப் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் பிரபல குற்றவாளியான "கஞ்சிபானி இம்ரான்" என்பவரின் முக்கிய உதவியாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 41 வயதான குறித்த சந்தேகநபர் இரத்மலானையைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். 2014 ஆம் ஆண்டு பேராதனையில் துப்பாக்கிமுனையில் அச்சுறுத்தி ஒருவரை கடத்திச் சென்று தாக்கிப் படுகாயமேற்படுத்தியமை, 2016 ஆம் ஆண்டு பேராதனைப் பகுதியில் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சந்தேகநபர் மலேசியாவில் கைது செய்யப்பட்டபோது அவருடன் இருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இரத்மலானையைச் சேர்ந்த 35 மற்றும் 31 வயதுடைய இருவர் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

-558783_850x460.jpg)










