மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘ரத்மலானை சைமா’ என அழைக்கப்படும் சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காக பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா எனக் கூறப்படும் குறித்த நபர், நே…
மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘ரத்மலானை சைமா’ என அழைக்கப்படும் சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காக பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா எனக் கூறப்படும் குறித்த நபர், நேற்று (10) இரவு பேராதனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் மலேசிய பொலிஸார் மற்றும் இன்டர்போல் அமைப்பின் உதவியுடன் அவரை அண்மையில் கைது செய்துள்ளனர்.
அவருடன் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டதுடன், மூவரும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
41 வயதுடைய பிரதான சந்தேகநபருக்கு எதிராக, 2014ஆம் ஆண்டு பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் துப்பாக்கிகளைக் காட்டி ஒருவரை கடத்திச் சென்று காயப்படுத்தியமை மற்றும் 2016ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தமை தொடர்பில் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஏனைய இரு சந்தேகநபர்களும் இன்று (11) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












