மன்னார் மாவட்டத்தில் “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய செயற்பாட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேர்மையான அரச சேவைக்கான “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய செயற்பாட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. க…
மன்னார் மாவட்டத்தில் “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய செயற்பாட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்
நேர்மையான அரச சேவைக்கான “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய செயற்பாட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நேற்று (24.07.2026) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. நேர்மை வாரம் – 2026 இதன்போது, 2026 ஜூலை 27 முதல் ஜூலை 31 வரை “நேர்மை வாரமாக” பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதுடன், நேர்மை வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. 📌 ஜூலை 27➡️ நிறுவன ரீதியாக நேர்மையை மேம்படுத்தும் நாள் 📌 ஜூலை 28➡️ நிதி, டிஜிட்டல், தொழில் முயற்சியாண்மை மற்றும் தொழில்நுட்ப நேர்மையை மேம்படுத்தும் நாள் 📌 ஜூலை 29➡️ ஆன்மீக, நெறிமுறை, கலாசார மற்றும் சமூக நேர்மையை மேம்படுத்தும் நாள் 📌 ஜூலை 30➡️ செயற்பாட்டு, உட்கட்டமைப்பு, சேவை வழங்கல் மற்றும் உழைப்பு நேர்மையை மேம்படுத்தும் நாள் 📌 ஜூலை 31➡️ சுற்றாடல், வள முகாமைத்துவம், கிராமிய மற்றும் சமூக வலுவூட்டல் நேர்மையை மேம்படுத்தும் நாள் மேலும், ஜூலை 28ஆம் திகதி காலை 9.00மணிக்கு நேர்மை கலாசாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் நடைபவணி நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இந்நேர்மை வாரத்தில் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய செயற்பாடுகள், அவற்றை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்கள், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம உள்ளக கணக்காய்வாளர், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.









-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)