கரந்தெனிய பிரதேசத்திலுள்ள பழங்கால விகாரை வளாகத்திலிருந்த மரக்கிளை முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மரக்கிளை முறிந்து விழுந்ததில் காயமடைந்த பெண் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரி…
கரந்தெனிய பிரதேசத்திலுள்ள பழங்கால விகாரை வளாகத்திலிருந்த மரக்கிளை முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மரக்கிளை முறிந்து விழுந்ததில் காயமடைந்த பெண் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஆவார்.
பெண் உயிரிழப்புஇவர் நேற்று குறித்த விகாரை வளாகத்திற்கு வந்த சந்தர்ப்பத்திலேயே மரத்திலிருந்து முறிந்து விழுந்த கிளைக்கு அடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த கிளை முறிந்து விழுந்ததன் காரணமாக அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கரந்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)
-558066_850x460.jpg)
