இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மற்றும் தீர்ப்புகளில் திருப்புமுனைகள் ஏற்பட்டு வரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேடைகளில் பாடல்களை பாடுவதில் மிகவும் ஆர்வம் உள்ள மைத்திரி, சில தினங்களுக்கு முன…

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மற்றும் தீர்ப்புகளில் திருப்புமுனைகள் ஏற்பட்டு வரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேடைகளில் பாடல்களை பாடுவதில் மிகவும் ஆர்வம் உள்ள மைத்திரி, சில தினங்களுக்கு முன்னர் திருமண நிகழ்வில் பாட மறுத்தமை அரசியல் மட்டத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு அண்மையில் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

திருமண நிகழ்வுஇந்த நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலவத்துகொட பகுதியில் பொலன்னறுவையை சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரின் மகனின் திருமண நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக் கொண்டிருந்தார். திருமண நிகழ்விற்கு வந்ததிலிருந்து மைத்திரிபால ஒரு பாடல் பாட வேண்டும் என்று அனைவரும் பெரிதும் விரும்பியுள்ளனர். ஆனால், அதற்கு மைத்திரி இணக்கம் தெரிவிக்கவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவர் அச்சத்தில் உள்ளமையினால் இயல்பான நிலையில் மைத்திரி இல்லை என அவருக்கு நெருக்கமான தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஹேமசிறிக்கும் பூஜிதனுக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டதால் முன்னாள் ஜனாதிபதி கடும் வருத்தத்தில் உள்ளார் எனவும் அவர் பாட மாட்டார் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பலவந்தமாக அழைத்து செல்லப்பட்ட மைத்திரிதிருமண நிகழ்வில் அனைவரும் தொடர்ந்து வந்து முன்னாள் ஜனாதிபதி ஒரு பாடல் பாடுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். எனினும் திருமண நிகழ்வின் இறுதிக்கட்டத்தில் மைத்ரியை பலவந்தமாக அழைத்து சென்று மேடையில் பாட வைத்துள்ளனர். சூழ்நிலையை சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் பாடலை பாட வேண்டிய கட்டாய நிலைக்கு மைத்ரி உள்ளாகியிருந்தார்.

அதன் பிறகு மைத்திரிபால சிறிசேன ஒரு பாடலைப் பாட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஒரு பாடல் தான் பாடுவேன் என கூறி மைத்திரிபால சிறிசேன சமாளித்துக் கொண்டதாக தெரியவந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டில் நட்டஈடாக பெருந்தொகை பணத்தை மைத்திரி நீதிமன்றத்திற்கு செலுத்தியுள்ளார். இந்நிலையில், மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சிறைத்தண்டனை கிடைக்கலாம் என்ற அச்சத்தில் மைத்திரி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.