டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்து வருவதால், குழந்தைகளுக்குக் காணப்படும் காய்ச்சல் நிலை 24 மணி நேரத்திற்கு மேல் நீடித்தால், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற முன்வருமாறு சுகாதார அதிகாரிகள் பெற்றோரிடம் கேட்டுக்கொள்கின்றனர். பல்வேறு கைமருத்துவங்களைச் செய்து குழந்தைக்கு…

டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்து வருவதால், குழந்தைகளுக்குக் காணப்படும் காய்ச்சல் நிலை 24 மணி நேரத்திற்கு மேல் நீடித்தால், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற முன்வருமாறு சுகாதார அதிகாரிகள் பெற்றோரிடம் கேட்டுக்கொள்கின்றனர்.

பல்வேறு கைமருத்துவங்களைச் செய்து குழந்தைக்குச் சிகிச்சை அளிக்க இருக்கும் விலைமதிப்பற்ற காலத்தை வீணடிக்காமல், அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குக் குழந்தையை அழைத்துச் சென்று தகுந்த மருத்துவ ஆலோசனை பெறுமாறு கொழும்பு ரிட்ஜ்வே  குழந்தைகள் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் பிரதீப் ரத்நாயக்க பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள்  குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் நான்கில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் மருவத்துவர் ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்நிலை மேலும் தீவிரமடைந்தால் மருத்துவமனை இடவசதி தொடர்பான சிக்கல்கள் எழக்கூடும் எனவும் அவர் கூறினார்.

"குறிப்பாகக் கூற வேண்டியது என்னவென்றால், தொலைதூரப் பகுதிகளில் இருந்து குழந்தையை ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனைக்கே அழைத்து வர வேண்டும் என்பதில்லை.

பெரும்பாலான மரணங்களுக்கு முக்கியக் காரணம் மருத்துவமனைக்கு அழைத்து வரத் தாமதமாவதுதான்.

காய்ச்சல் 24 மணி நேரத்திற்கு மேல் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது பொருத்தமானது.

பல நாட்களாக வீட்டில் இருந்து கொண்டு கைமருத்துவம் செய்து, குழந்தைக்குத் தேவையான சிகிச்சையை வழங்க இருக்கும் விலைமதிப்பற்ற காலத்தை வீணடிக்காமல், மிகவும் விரைவில் தகுதியான மருத்துவர் அல்லது அரசு மருத்துவர் ஒருவரிடம் கொண்டு செல்வது மிகவும் முக்கியம்" என அவர் தெரிவித்தார்.