மட்டக்களப்பு அரச திணைக்கள சாரதிகள் சிலர் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சிலருடன் இணைந்து பண மோசடியில் ஈடுபடுவதாக ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பு - பாலமீன்மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று (28.08.2026) இடம்பெற்ற வி…
மட்டக்களப்பு அரச திணைக்கள சாரதிகள் சிலர் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சிலருடன் இணைந்து பண மோசடியில் ஈடுபடுவதாக ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பு - பாலமீன்மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று (28.08.2026) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.எரிபொருளில் மோசடிஅவர் மேலும் தெரிவிக்கையில், மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்களின் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான பணத்தை அந்தந்த அரச திணைக்களங்கள் மாதாந்தம் வழங்குகிறது.உதாரணமாக ஒரு திணைக்களத்தின் அரச வாகனத்துக்கு எரிபொருள் நிரப்புவதற்கு 100 லீற்றர் டீசலுக்கான அனுமதியை பெற்றுக் கொண்டு 50 லீற்றர் டீசலை மட்டும் வாகனத்தில் நிரப்பிவிட்டு, மிகுதி 50 லீற்றர் எரிபொருளை, எரிபொருள் உரிமையாளரிடம் 1 லீற்றருக்கு 300 அல்லது 310 ரூபா வீதம் விற்று பணம் பெறுகின்றனர்.
இவ்வாறு பண மோசடிகளில் ஈடுபடுவோருக்கு உடந்தையாக இருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதி பத்திரத்தை இரத்து செய்ய வேண்டும்.சட்ட நடவடிக்கை
சுகாதாரதுறைக்கு பெரும் தொகை பணத்தை அரசாங்கம் ஒதுக்கீடு செய்தும் இவ்வாறான சில அரச அதிகாரிகளின் மோசடிகளால் அரசாங்கத்துக்கு பாரிய நட்டம் ஏற்படுகின்றது.அரச திணைக்களங்களின் வாகனங்களுக்கு தேவையான எரிபொருளை நிரப்பும் போது குறித்த திணைக்களத்தின் அதிகாரி ஒருவரை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அனுப்பி எரிபொருளை நிரப்பினால் இவ்வாறான மோசடியை தடுக்க முடியும்.
இந்த மோசடி தொடர்பாக பொலிஸாரே, குற்றப்புலனாய்வு பிரிவினரை அழைத்தால் எங்களிடம் இருக்கும் ஆதாரத்தை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.
எனவே இந்த விடயத்தில் கவனம் செலுத்தாவிட்டால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படும். இலங்கை தொடர்ந்தும் கடன் பெறுகின்ற நாடாகத்தான் இருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.












