முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் ஆடி மாதம் 17ஆம் நாள் (02.08.2026), சங்கடஹர சதுர்த்தி திதியை முன்னிட்டு மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளதாக ஆலய பரி…
முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் ஆடி மாதம் 17ஆம் நாள் (02.08.2026), சங்கடஹர சதுர்த்தி திதியை முன்னிட்டு மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளதாக ஆலய பரிபாலன சபை அறிவித்துள்ளது.
திருவிழா நாளான 02ஆம் திகதி காலை 7.00 மணிக்கு விசேட அபிஷேகத்துடன் உற்சவ நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன.தொடர்ந்து காலை மற்றும் நண்பகல் நேரங்களில் விநாயகப் பெருமானுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் விசேட பூஜைகள் நடைபெற்று, விபூதிப் பிரசாதம் மற்றும் காழாஞ்சிப் பிரசாதம் வழங்கப்படுவதுடன், மதியம் 11.30 மணியளவில் அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.
மாலை 3.30 மணிக்கு, நீராவியடிப் பிள்ளையார் ஆலய பிரதம பூசகரால் பாரம்பரிய முறைப்படி, நீராவியடிப் பிள்ளையாரின் அருளனுமதியுடன் நாயாறு முனியப்பர் ஆலயத்திலிருந்து மடைப்பண்டம் எடுத்து வரப்படும்.இடம்பெறவுள்ள பூஜைகள்.. பின்னர் மாலை 6.00 மணிக்கு கச்சை நேருதல், இரவு 7.00 மணிக்கு மடை பரவுதல், இரவு 8.00 மணிக்கு வளந்துக்கு நூல் சுற்றுதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து இரவு 10.00 மணிக்கு வளந்து நேர்ந்து பொங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.பின்னர் 03.08.2026 அதிகாலை 12.30 மணிக்கு சிறப்பு பூஜை வழிபாடுகளும், அதிகாலை 2.00 மணிக்கு பரிகலம் வழிவிடுதல் நிகழ்வும் நடைபெற்று வருடாந்த பொங்கல் உற்சவம் நிறைவடையவுள்ளது.
இவ்வுற்சவத்தில் பிரதம குருவாக "சிவாகம கிரியா கிராமஜோதி" சிவசிறி திருஞானசுந்தர திருஞானசம்பந்தக் குருக்கள் (ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தானம் – குழுழமுனை) தலைமையேற்கவுள்ளதுடன், ஆலய பூசகராக சிவபாதம் கணேசபுவன் (நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் – பழைய செம்மலை) வழிபாடுகளை முன்னின்று நடத்தவுள்ளார். பொங்கல் தினத்தன்று ஆலயத்திற்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பக்தர்கள் பால், தயிர், இளநீர், பூக்கள், பூமாலைகள் மற்றும் பழவகைகள் உள்ளிட்ட உபயங்களை வழங்கி இறைபணியில் பங்கேற்று விநாயகப் பெருமானின் திருவருளைப் பெற்றிடுமாறு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய பரிபாலன சபை அன்புடன் அழைப்பு விடுத்துள்ளது.









-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)