Home பிரசித்த செய்தி முன்னாள் ஐ.ஜி.பி பூஜிதவுக்கு மரண தண்டனை முன்னாள் ஐ.ஜி.பி பூஜிதவுக்கு மரண தண்டனை Editorial / 2026 ஜூலை 31 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}} உளவுத்துறை முன்எச்சரிக்கை தகவல்கள் கிடைத்தபோதிலும், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்குத்…

Home பிரசித்த செய்தி முன்னாள் ஐ.ஜி.பி பூஜிதவுக்கு மரண தண்டனை

முன்னாள் ஐ.ஜி.பி பூஜிதவுக்கு மரண தண்டனை

Editorial   /

2026 ஜூலை 31 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

உளவுத்துறை முன்எச்சரிக்கை தகவல்கள் கிடைத்தபோதிலும், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமை மற்றும் கடமையைச் செய்யத் தவறியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) பூஜித் ஜெயசுந்தரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற த்ரிபயRevision / விசேட மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் (Trial-at-Bar) இன்று மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

நீதிபதிகளான பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாமினால், வழக்கு விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்துக் கிடைத்த உளவுத்துறைத் தகவல்களின் அடிப்படையில் செயல்படத் தவறியமைக்காக, குற்றவியல் அலட்சியம் மற்றும் கடமைத் தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு விசேட மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாமில் தனித்தனியாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

பிப்ரவரி 18, 2022 அன்று, அன்றைய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம், அரசுத் தரப்பு சாட்சியங்களை முடித்துக் கொண்டதை அடுத்து, பிரதிவாதிகளின் தற்காப்புச் சாட்சியங்களைக் கோராமலேயே இருவரையும் விடுவித்தது.

அந்த விடுதலையானது சட்டத்திற்குப் புறம்பானது எனக் கூறி, அதை ரத்து செய்யக் கோரி சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அந்த மேல்முறையீட்டை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், பிரதிவாதிகளின் தற்காப்புச் சாட்சியங்களைக் கோராமல் அவர்களை விடுவித்ததன் மூலம் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் சட்டப் பிழை இழைத்துள்ளதாகத் தீர்ப்பளித்தது. எந்தவொரு தீர்ப்பையும் வழங்குவதற்கு முன்னர் பிரதிவாதிகள் தங்களது தற்காப்புச் சாட்சியங்களைச் சமர்ப்பிக்க அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறிய உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு உத்தரவிட்டது.

மீள் விசாரணையைத் தொடர்ந்து, கொழும்பு விசேட மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று தனது தீர்ப்பை வழங்கி, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு மரண தண்டனை விதித்தது.

RECOMMENDED

TODAY'S HEADLINES

Comments - 0

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

Reply To: Eranda - cb chds hcdsh cdshcsdchdhd