கொழும்பு - கொலன்னாவை வீதியில் கொத்தட்டுவ பகுதியை அண்மித்த பகுதியில் இன்று (27.07.2026) இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டி எதிரே வந்த பேருந்துடன் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.முச…

கொழும்பு - கொலன்னாவை வீதியில் கொத்தட்டுவ பகுதியை அண்மித்த பகுதியில் இன்று (27.07.2026) இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டி எதிரே வந்த பேருந்துடன் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.முச்சக்கரவண்டி சாரதி பலி

முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், முச்சக்கரவண்டியின் பின்புற ஆசனத்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டி சாரதியின் அலட்சியமான செயற்பாடே இந்த விபத்துக்குக் காரணம் என ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.