திருகோணமலை - உப்புவெளி கமநல சேவை பிரிவுக்குட்பட்ட முதலியார் குளம் நீர் இன்றி முற்றிலும் வற்றிப்போயுள்ளதால், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகளும், நன்னீர் மீனவக் குடும்பங்களும் கடுமையான பாதிப்புகளை எதிர்நோக்குகின்றனர். குளத்தில் நீர்மட்டம் முற்றிலும் வற்றியதால் விவசாய நிலங்களு…
திருகோணமலை - உப்புவெளி கமநல சேவை பிரிவுக்குட்பட்ட முதலியார் குளம் நீர் இன்றி முற்றிலும் வற்றிப்போயுள்ளதால், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகளும், நன்னீர் மீனவக் குடும்பங்களும் கடுமையான பாதிப்புகளை எதிர்நோக்குகின்றனர்.
குளத்தில் நீர்மட்டம் முற்றிலும் வற்றியதால் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனம் பாதிக்கப்பட்டு பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வாழ்வாதாரத்தை இழந்த மக்கள்
இதனால் பெரும் முதலீடு செய்துள்ள விவசாயிகள் பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
முதலியார் குளத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு நன்னீர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த பல குடும்பங்கள், குளம் வற்றியதால் தொழில் செய்ய வழியின்றி அன்றாட உணவிற்கே திணறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சுற்றியுள்ள கிராமங்களில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கான குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதிலும் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது.












