வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்த தமிழ் பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்படுகிறார்.இச் சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக இருந்த OIC சிந்தக்க அனுராத வவுனியாவுக்கு இடமாற்றப்பட்டு சாதாரண சேவையில் இணைக்கப்பட்டிருந்தார்…
வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்த தமிழ் பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்படுகிறார்.இச் சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக இருந்த OIC சிந்தக்க அனுராத வவுனியாவுக்கு இடமாற்றப்பட்டு சாதாரண சேவையில் இணைக்கப்பட்டிருந்தார்.ஆனால் தற்போது குறித்த OIC சிந்தக்க அனுராதவுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக லண்டனில் இருந்து இயங்கும் புலனாய்வு செய்தி சேவை ஒன்று ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளது.அது தொடர்பான முழுமையான விபரங்கள், கொழும்பிலுள்ள வீட்டில் வேலை செய்த பெண்சலாகா' (Salaka) முன்னாள் தலைவர் நெத்தி குமாரவின் மனைவி சுதர்மா நெத்தி குமாரவின் வீட்டில் பதுளை தெமோதரை தோட்டத்தில் வசிக்கும் ஆர்.ராஜகுமாரி 42 வயதான பெண் வேலை செய்கிறார்.கொழும்பில் உள்ள வீடுகளில் வேலை செய்துவிட்டுச் சென்றால், பணம் திருடிவிட்டார் என்பார்கள், அல்லது தங்கம், மாணிக்கக் கற்களைத் திருடிவிட்டார் என்று பொய் வழக்குகள் தாக்கல் செய்வது வழமையாக நடைபெற்று வருவதாகும். இந்தச் சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் தலையிட்டுள்ளனர். டிரான் அலஸின் திருமணத்திற்கு முரணான தொடர்பிலான பெண் ஒருவர்- சுதர்மா நெத்தி குமாரவின் வீட்டுக்கு அண்மையில் வசிப்பவர். அந்தப் பெண் மூலமாகப் பாரிய அழுத்தத்தைக் கொடுத்து, சுதர்மா நெத்தி குமார அந்த ஏழைத் தமிழ் பெண்மணி தன் வீட்டிலிருந்து சென்று இரண்டு நாட்களில், "தங்கக் கடிகாரம் மற்றும் 500 கிராம் தங்கம் திருடிவிட்டார்" என்று பொய் குற்றச்சாட்டை பதிவிட்டு. பின்னர் அவரை வெலிக்கடை பொலிஸுக்குக் கொண்டு வந்துள்ளனர்.
வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் நடந்த கொடூரம்அன்றைய வெலிக்கடை OIC சிந்தக்க அனுராதவின் காலத்தில், அந்த அப்பாவி பெண்ணை கொடூரமான, காட்டுமிராண்டித்தனமான முறையில் தாக்கி படுகொலை செய்கின்றனர். அவரின் உடலில் 34 பலத்த காயங்கள் இருந்தாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தன. இரண்டு வயதில் ஒரு குழந்தை, 17 வயதில் ஒரு குழந்தை என மூன்று பிள்ளைகளின் தாயாவார். இது சம்பவம் தொடர்பில் விடுக்கப்பட்ட கடுமையான அழுத்தத்தில் அன்று CID விசாரணைகளை மேற்கொண்டு செல்லும்போது, டிரான் அலஸ் மற்றும் நெத்தி குமார அன்றைய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏமில் ரஞ்சன் (Emil Ranjan) விசாரணை செய்தபோது கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்த அரசாங்கம் வந்த பிறகு, அந்த பொலிஸ் பொறுப்பதிகாரி OIC இடமாற்றம் செய்யப்பட்டு, சிலர் கைது செய்யப்பட்டனர். இப்போது உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. ஆனால் இப்போது இந்த OIC சிந்தக்க அனுராதவுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. RTM (RTM 14) உத்தரவின் மூலம் கிருலப்பனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக (OIC) நியமிக்கப்பட்டுள்ளார். அந்த ஏழைப் பெண்ணை அடித்துக் கொன்றவர், இப்போது உயர் நீதிமன்றத்தில் வழக்கு எதிர்கொள்பவர் V8 வாகனத்தில் வந்துதான் பதியை பொறுப்பேற்கிறார். இவர் ஒரு பெரும் ஊழல்வாதி. ராஜகிரிய, வெலிக்கடை பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு இவர் எவ்வளவு ஊழல்வாதி என்று தெரியும். இவர் 11 SPA (ஸ்பா) நடத்தினார். அந்த 11 இடங்களிலிருந்தும் பணம் வசூலித்தார். அதுமட்டுமன்றி இவர் இரண்டு SPA களை ஒப்பந்த அடிப்படையில் (contract) கொடுத்துள்ளார். இது வெலிக்கடை பொலிஸாருக்கும் தெரியும். தற்போதைய பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கும் இது தெரியும். இந்த ஏழைப் பெண்ணிற்காக யாரும் பேசுவதில்லை. ராஜகுமாரிக்கு என்ன நடந்தது? இன்று ராஜகுமாரியின் கோப்புகள் CID யினால் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.












