இந்த ஆண்டின் நாக பஞ்சமி ஆகஸ்ட் 17 ஆம் திகதி வருகிறது. இந்த நாக பஞ்சமி நாக தெய்வங்களை வழிபட உகந்த நாளாகும். ஆன்மீக ரீதியாக மற்றும் ஜோதிட ரீதியாக இந்த ஆண்டின் நாக பஞ்சமி சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த நாக பஞ்சமி சிவபெருமானுக்கு உரிய திங்கட்கிழமையில் வருகிறது. இப்படியான அபூர்வமான…

இந்த ஆண்டின் நாக பஞ்சமி ஆகஸ்ட் 17 ஆம் திகதி வருகிறது. இந்த நாக பஞ்சமி நாக தெய்வங்களை வழிபட உகந்த நாளாகும். ஆன்மீக ரீதியாக மற்றும் ஜோதிட ரீதியாக இந்த ஆண்டின் நாக பஞ்சமி சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த நாக பஞ்சமி சிவபெருமானுக்கு உரிய திங்கட்கிழமையில் வருகிறது. இப்படியான அபூர்வமான நிகழ்வின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகைல் காணப்படும்.குறிப்பாக சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவுடன் தங்கள் வாழ்க்கையில் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர்.அதுவும் சிவபெருமான் மற்றும் நாக தெய்வங்களின் அருளால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி ஆதாயங்கள், தொழிலில் வளர்ச்சி, வியாபார விரிவாக்கம், வேலை வாய்ப்பு மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காணவுள்ளனர். இப்போது நாக பஞ்சமி நாளில் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம். கடகம் கடக ராசிக்காரர்களுக்கு நாக பஞ்சமி நாளானது மிகவும் மங்களகரமானதாக இருக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். செய்யும் வேலைகளில் நல்ல வெற்றியைக் காண்பீர்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய திட்டங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும். இதன் மூலம் பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.கன்னி நாக பஞ்சமி நாளானது கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும் நாளாக இருக்கும். இந்நாளில் எடுத்த காரியத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான வேலைகள் தடையின்றி வெற்றிகரமாக முடிவடையும். புதிய வேலை அல்லது தொழிலை தொடங்குவதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மேலும் தொழில் தொடர்பான விஷயங்களில் நல்ல பலன்களைப் பெறக்கூடும்.மகரம் மகர ராசிக்காரர்களுக்கு இந்த நாக பஞ்சமி சிறப்பானதாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். இக்காலத்தில் வேலை தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகள் உங்களுக்கு நல்ல பலனைத் தரும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். மன அழுத்தம் குறைந்து, மனம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆன்மீக பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை சந்திக்கக்கூடும்.