நான் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டது மற்றும் எனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் - நல்லாட்சி அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்க காலத்தில் கிடைத்த அனுபவங்கள் ஒரு தந்தையால் தன் பிள்ளைக்குக் கொடுக்க முடியாததை நல்லாட்சி அரசாங்கமும் ஜே.வி.பி.யும் எனக்கு வழ…
நான் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டது மற்றும் எனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் - நல்லாட்சி அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்க காலத்தில் கிடைத்த அனுபவங்கள் ஒரு தந்தையால் தன் பிள்ளைக்குக் கொடுக்க முடியாததை நல்லாட்சி அரசாங்கமும் ஜே.வி.பி.யும் எனக்கு வழங்கியுள்ளதாக தந்தை மகிந்த மகிழ்ச்சியடைகிறார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்தி வரும் தொடர் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்குமாறு நாமல் ராஜபக்சவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு இணங்க நேற்று (21.08.2026) முன்னிலையாகி வாக்குமூலம் அளித்த பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.தந்தை ஒருவர் எதிர்பார்க்கும் முதிர்ச்சிஊடகவியலாளர்கள் ஒருவர் நாமலிடம் இந்த விசாரணைகள் தொடர்பில் தந்தை மகிந்த ராஜபக்ச என்ன சொல்லுகிறார் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது மேலும் தெரிவித்த கருத்துக்கள்... இதனால் மகன் நாளுக்கு நாள் முதிர்ச்சியடைகிறார் என்றும், யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு தவறுகளைத் திருத்திக் கொண்டு முன்னோக்கிச் செல்வார் என்றும் அவர் நம்புகிறார். தங்கல்ல பகுதியில் ஒருவர் ஹோட்டல் ஒன்றை வாங்கியுள்ளார், ஆனால் அவருக்கு அதை எவ்வாறு வாங்கினார் என்று சொல்ல முடியாத போது, அது நாமல் ராஜபக்சவுடையது என்று சொல்கிறார்கள். இந்த அரசாங்கம் முதல் நல்லாட்சி அரசாங்கத்தின் போது தேர்தல் மேடைகளில் நாட்டில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள் என்னுடையது என்றனர். டுபாய் மெரியட் (Dubai Marriott) என்னுடையது என்றனர்.அக்காலத்தில் ஊழல் ஒழிப்புக்குழுவில் இருந்தவர்கள் தான் தற்போதைய அரசாங்கத்தில் இருக்கிறார்கள். எனவே, அவர்கள் அன்று சொன்ன பொய்களுக்கும், தங்களால் புனையப்பட்ட பொய்களை சட்டபூர்வமாக்க முயற்சிக்கிறார்கள். எங்களை விசாரணைக்கு வருமாறு கூப்பிட்டதும் நாங்கள் வந்து விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறோம்.அன்று நடந்துள்ளதும் இவ்வாறு தான் என குறிப்பிட்டுள்ளார்.












