நாமல் ராஜபசக்ச தலைமையிலான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க மட்டக்களப்பு மக்கள் அனைவரும் என்னுடன் கை கோர்க்க வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சுரேஸ் குமார் ஜெய்ஸ்மன் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பில் நேற்று(08.08.2026) இடம்பெற்ற ஊடக மாநாட்டில…
நாமல் ராஜபசக்ச தலைமையிலான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க மட்டக்களப்பு மக்கள் அனைவரும் என்னுடன் கை கோர்க்க வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சுரேஸ் குமார் ஜெய்ஸ்மன் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று(08.08.2026) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட அமைப்பாளராக பதவி ஏற்றுக் கொண்ட பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.நாமல் ராஜபக்சவின் அரசியல் பணி இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், அமைப்பாளர் பதவி என்பது ஒரு அதிகாரமிக்க பதவி அல்ல இது மக்களுக்கான பொறுப்பாகவே நான் கருதுகின்றேன். அந்த அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டமானது பல சமூக, இன, மதம் சார்ந்த ஒரு கட்டமைப்பைக் கொண்ட மக்கள் வாழும் பிரதேசமாகும்.நாமல் ராஜபக்சவின் அரசியல் பணி எந்தவித சமூகத்துக்கும் முரண்பாடு இல்லாமல் அனைத்து சமூகத்தையும் இணைத்து செல்லக்கூடிய ஒரு அரசியல் நிலைப்பாட்டை கொண்டது.
அதனடிப்படையில் மாவட்டத்திலுள்ள இளைஞர்களுக்கு உலகளாவிய ரீதியில் தொழிநுட்பம் சார்ந்த பல தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கவுள்ளோம்.
அது மட்டுமல்லாது கடற்றொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைக்கு இடைக்கால தீர்வு இல்லாமல் நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கும் தயாராகவுள்ளோம்.அபிவிருத்தித் திட்டங்கள் அத்துடன் கல்வி , அடிப்படை வசதி, உட்கட்டமைப்பு போன்ற பல அபிவிருத்தி விடயங்களை சரியாக கொண்டு செல்வதற்கு இலகுவான கட்டமைப்பை நாங்கள் உருவாக்கவுள்ளோம்.
அதேவேளை எதிர்கால நாட்டின் வளர்சிக்காகவும் இளைஞர்களின் வளர்ச்சிக்காகவும் மட்டக்களப்பின் வளர்ச்சிக்காகவும் புதியதொரு சூழலை உருவாக்கும் பாரிய பொறுப்பு எமக்கு உள்ளது.எனவே கிராமம் கிராமமாக சென்று மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து அதற்குரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவே நான் இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளேன்.
அரசியலில் கருத்து வேறுபாடு இருக்கலாம். அந்த கருத்து வேறுபாடு எந்தவொரு சமூகத்தையும் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதுடன் வார்த்தைகளால் மட்டும் அல்லாது செயல்கள் மூலமாக மக்களுக்கு சேவை செய்யவே இந்த அரசியல் பயணத்தை நான் ஆரம்பித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.












