ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் இதுவரை ஊடகங்களில் குறிப்பிடப்படாத பல தகவல்களை நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.குறித்த தகவல்களை தர்க்க ரீதியாக ஒப்புவித்து தனக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய சிறப்பு…
ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் இதுவரை ஊடகங்களில் குறிப்பிடப்படாத பல தகவல்களை நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.குறித்த தகவல்களை தர்க்க ரீதியாக ஒப்புவித்து தனக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய சிறப்பு கலந்துரையாடலிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.அதில் தெரிவிக்கப்பட்டுள்ள பல கருத்துக்கள்... தாஜுதீன் கொலை யோஷிதவில் தொடங்கியது. ஆனால், அந்த நேரத்தில் யோஷித இலங்கையில் இல்லை. பின்னர் அம்மா ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு எடுத்ததாக குறிப்பிட்டனர். அவரும் கொழும்பில் இருக்கவில்லை. அதற்குப் பிறகு கொழும்பில் இருக்கும் குடும்பத்தினர் யார் என்று பார்த்தார்கள். மஹிந்த ராஜபக்சவின் பெயரை குறிப்பிட முடியாது. அதனால் என் பெயரைப் போட்டார்கள்.சோடிக்கப்பட்ட சிசிரிவி (CCTV) காட்சிகள் 2015 ஆம் ஆண்டில் எனக்கு நினைவிருக்கும் வகையில் ஊடகங்களில் பெரியளவில் பேசப்பட்ட ஒரு விடயம் தான் அம்மாவின் 'சிரிலிய சவிய' சமூக சேவை அமைப்பிற்குச் சொந்தமான ஒரு ஜீப் வண்டி ஒன்று தாஜுதீனின் காரை பின்தொடர்ந்ததாக வெளியான சிசிரிவி (CCTV) காட்சிகள் கிடைத்துள்ளதாக தெரிவித்தனர். பின்னர் அந்த ஜீப் வண்டி கைப்பற்றப்பட்டதாகவும் அந்த ஜீப் வண்டியின் நிறம் பலமுறை மாற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால், இந்த நாட்டின் ஒவ்வொரு சம்பவம் தொடர்பாகவும் சிசிரிவி காட்சிகள் குறித்து பல நாடுகளிடம் அறிக்கை கோரப்பட்டது.சமீபத்திய வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகளாக அனைத்து சம்பவங்களின் சிசிரிவி காட்சிகளும் ஊடகங்களில் வெளியிடப்பட்டன. இப்போது இந்தக் காட்சிகள் இருந்தால், யாரோ ஒருவர் பின்னால் துரத்திச் சென்றார் என்று தெளிவாக சிசிரிவி இருந்தால், அரசாங்கத்திற்கோ அல்லது பொலிஸாருக்கோ இந்தக் காட்சிகளைத் தெளிவாக ஊடகங்களுக்கு முன்வைக்க முடியும்.ஏன் செய்யவில்லை? எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதைச் செய்யவில்லை. சமூக ஊடகங்களில் இந்த விடயத்தைப் பேசும்போதும் கூட இந்த சிசிரிவி காட்சிகள் குறித்துக் குறிப்பிடப்படுவதில்லை. ஆதாரத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக இறுதியில் தாஜுதீன் மோதிய வாகனம் வேறு ஒன்று என்றார்கள். ஆனால் இப்போது பின்னால் சென்ற வாகனம் பற்றிப் பேசுகிறார்கள். அப்படியானால் பின்னால் சென்ற வாகனத்தைத் தேடும்போது இது சிக்கவில்லையா? ஆனால் அன்று அந்தக் குற்றச்சாட்டுகளைச் சுமத்திய நபர் இன்று அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சொல்கிறார். அதாவது முதலில் குற்றச்சாட்டு சுமத்தியவர் இப்போது தான் சொன்னது பொய் என்று சொல்கிறார். அந்த காலத்தில் அரசியல் மேடைகளில் குற்றச்சாட்டு சுமத்தியவர்கள் இன்று ஊடகச் சந்திப்புகளில் சொல்கிறார்கள், அவை அந்த காலத்தில் அரசியல் மேடைகளில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் என்று. ஏனென்றால் அவர்கள் இப்போது எதிர்க்கட்சியில் இருக்கிறார்கள். இதெல்லாம் அரசியலுக்காக சோடிக்கப்பட்ட காரணங்கள் என குறிப்பிட்டுள்ளார்.












