ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் பின்னர், நாட்டின் சிறைச்சாலைகளில் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் நலன் உறுதி செய்வதற்காக ஒருங்கிணைந்த விசேட பாதுகாப்பு கட்டமைப்பு அமைக்கப்படவுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நாட்டிலு…

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் பின்னர், நாட்டின் சிறைச்சாலைகளில் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் நலன் உறுதி செய்வதற்காக ஒருங்கிணைந்த விசேட பாதுகாப்பு கட்டமைப்பு அமைக்கப்படவுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

நாட்டிலுள்ள 33 சிறைச்சாலைகளையும் உள்ளடக்கிய வகையில் உருவாக்கப்படவுள்ள இந்த புதிய பாதுகாப்பு கட்டமைப்பில், சிறைச்சாலைகள் திணைக்களம், பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் முப்படையினரின் பங்களிப்புடன் கூடிய விசேட விரைவுச் செயற்பாட்டு அலகு அமைக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.பாதுகாப்பு வழிமுறைகள்

மேலும், பாதுகாப்பிற்கு அப்பாற்பட்டு கைதிகளின் நலன் மற்றும் இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமாவதைத் தடுத்தல் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய தேவைகளும் இதன் மூலம் கவனத்தில் கொள்ளப்படும்.

அத்துடன், சிறைச்சாலையில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 61 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நீதி அமைச்சர், சிறைச்சாலைகளுக்குள் சதித்திட்டங்கள் மூலம் முன்னெடுக்கப்படும் குற்றச் செயல்களைத் தடுக்க எவ்வித வாய்ப்பும் வழங்கப்படமாட்டாது. இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்பில்லாத சாதாரண கைதிகளுக்குத் தேவையான நிவாரணங்கள் வழங்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.

சிறைச்சாலை அமைப்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து, தீர்மானிக்கப்பட்ட புதிய கமிஷன்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை 33 சிறைச்சாலைகளிலும் நடைமுறைப்படுத்தும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.