தற்போதைய அரசாங்கத்திற்கு நாட்டு மக்கள் வழங்கிய பெரும்பான்மை ஆணை என்பது பழைய சட்டங்களுக்குள் அடைபட்டு நிற்பதற்காக வழங்கப்பட்டது அல்ல என அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் புதிய சட்டங்களை இயற்றியாவது அல்லது இருக்கும் சட்டங்களை மாற்றியமைத்தாவது ஒரு முழுமையான…

தற்போதைய அரசாங்கத்திற்கு நாட்டு மக்கள் வழங்கிய பெரும்பான்மை ஆணை என்பது பழைய சட்டங்களுக்குள் அடைபட்டு நிற்பதற்காக வழங்கப்பட்டது அல்ல என அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் புதிய சட்டங்களை இயற்றியாவது அல்லது இருக்கும் சட்டங்களை மாற்றியமைத்தாவது ஒரு முழுமையான 'முறைமை மாற்றத்தை' ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே வழங்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். வரலாற்று சிறப்புமிக்க ஆணை இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், மக்கள் இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆணையை மூன்று பிரதான காரணங்களுக்காக வழங்கியுள்ளனர். முதலாவதாக, பழைய அரசியல் கலாசாரத்தை மாற்றிப் பிள்ளைகள் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவது, இரண்டாவதாக, சட்டம் மற்றும் நீதியின் ஆட்சியை உறுதிப்படுத்துவது, மூன்றாவதாக, வங்குரோத்தான பொருளாதாரத்தை மீட்டு முன்னோக்கிச் செல்வது என்பனவாகும்.

நாட்டின் வரலாற்றிலேயே முதன்முறையாக அரசியல்வாதிகள், பெரும் தொழில் உரிமையாளர்கள் மற்றும் பாதாள உலக குற்றவாளிகள் உட்பட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, சட்டம் தன் கடமையைச் செய்யும் நிலை தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.இலங்கையின் பொருளாதாரம் முற்றிலும் வீழ்ச்சியடைந்திருந்த இலங்கையின் பொருளாதாரம் தற்போது ஆசிய பிராந்தியத்திலேயே மிகவும் வலுவான பொருளாதாரமாக மாற்றப்பட்டுள்ளதுடன், அந்நியச் செலாவணி நெருக்கடியில் இருந்த நாடு தற்போது நேர்மறையான நிலைக்கு மீண்டெழுந்துள்ளது.

போக்குவரத்து, கல்வி, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் ஏற்றுமதித் துறைகளிலும் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் ஏற்பட்டு வருவதால், மக்கள் எதிர்பார்த்த முறைமை மாற்றத்தின் பெரும்பகுதியை கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் அரசாங்கம் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது என்றார்.